17 வது மக்களவையில் பிரதமர் மோடி உள்ளிட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்பு

17 வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் டெல்லியில் தொடங்கியுள்ளது. இதையொட்டி மக்களவையின் தற்போதைய சபாநாயகராக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவரும், தொடர்ந்து 7முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்ட வீரேந்திரகுமார் காதிக் பொறுப்பேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

 

காலையில் மக்களவை கூட்டத்தொடர் தொடங்கியதும் உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவி பிரமாணம் செய்து வைக்க தொடங்கினார். இதில் முதல் ஆளாக பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்றார். மோடியை தொடர்ந்து பொறுப்பேற்ற அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் ஹிந்தியிலும், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், இணை அமைச்சர்கள் ஆகியோர் சமஸ்கிருதத்திலும் உறுதிமொழி ஏற்றனர்.

 

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பிரகாலத் ஜோஷி ,சதானந்தகௌடா ஆகியோர் கன்னடத்தில் உறுதிமொழி ஏற்றனர். கேரள மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் தாய் மொழியான மலையாளத்தில் உறுதிமொழி ஏற்கப்படும் என்று எண்ணியிருந்த நிலையில், ஹிந்தியில் உறுதிமொழி எடுத்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து தேர்வு பெற்ற மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தமது தாய் மொழியான டோக்ரியில் உறுதிமொழி ஏற்றார்.

 

மத்திய அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவர் தமது தாய்மொழியான பஞ்சாபில் உறுதிமொழி ஏற்றார். அசாம் மாநிலத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் தாய் மொழியான அசாமில் உறுதிமொழி ஏற்றனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் தேபாஸ்ரீ தமது தாய் மொழியான வங்காள மொழியில் உறுதிமொழி ஏற்றார். ஆந்திர மாநிலத்திலிருந்து தேர்ந்து எடுக்கபட்ட உறுப்பினர்களில் பெரும்பானவர்கள் தெலுங்குவில் உறுதிமொழி ஏற்றனர்.


Leave a Reply