பெற்றோர் கண் எதிரே உயிரிழந்த மகன்! சோகத்தில் கிராம மக்கள்

கடலூர் மாவட்டத்தில் தம்பியின் காலணியை சுமந்தபடி ஓடோடி வந்த அண்ணன் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வசிப்பவர் கணேஷ் , செங்கல் சூலையில் பணியாற்றி வரும் அவருக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். மூத்த மகன் விக்னேஷ் 6 வகுப்பில் சேர உள்ளான்.

 

இந்நிலையில் இளைய மகன் ஹரிகரனை பள்ளியில் விடுவதற்காக ரமேஷ் தனது மனைவியோடு விருத்தாசலம் சாலையில் நின்று இருந்தார். அப்போது ஹரிஹரன் காலணி இல்லாமல் பள்ளிக்கு செல்வதை கவனித்த மூத்தமகன் விக்னேஷ் வீட்டிலிருந்த காலனியை எடுத்துக்கொண்டு பெற்றோர் இருக்கும் சாலைக்கு ஓடியுள்ளார். அப்போது தனது தம்பியை பார்த்தவாறே சாலையை கடக்க முற்பட்ட போது விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி சென்ற கார் வேகமாக மோதியது.

 

இதில் தூக்கி வீசப்பட்ட விக்னேஷ் ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்தார். பதறிபோன பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் விக்னேஷை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Leave a Reply