வகுப்பறையில் ஆடலாம், அணைக்கலாம்…! அசத்தும் புதுச்சேரி ஆசிரியை சுபாஷினி

வகுப்பு சூழலை முற்றிலும் மாற்றி அனைவரின் பாராட்டுகளையும் அள்ளியிருக்கிறார் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியை சுபாஷினி. மாணவச்செல்வங்களுடன் கட்டிபிடித்து நடனமாடி கலக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசு தொடக்கப்பள்ளி எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

வகுப்பறை சூழலுக்குள் மாணவர்களை எப்படி பழக்கப்படுத்துவது என்று யோசித்த ஆசிரியை சுபாஷினி , புதிய முயற்சியில் இறங்கினார். காலையில் வகுப்பு தொடங்குவதே வித்தியாசமாக இருக்கிறது. வகுப்பறையில் மழலைகள் வரிசையில் நின்றபடி உள்ளே நுழைகிறார்கள்.பலகை ஒன்றில் கட்டிபிடித்தல், நடனமாடுதல் போன்று படங்கள் வரையப்பட்டுள்ளன.

மாணவ,மாணவிகள் உள்ளே நுழைந்து தங்கள் விருப்பம் எது என்று கை வைத்து சொல்கிறார்கள். அக்குழந்தைகளுடன் ஆசிரியை சுபாஷினி நடனமாடி ,ஆசையுடன் அரவணைத்து வரவேற்கிறார். எத்தனை மாணவச்செல்வங்கள் வரிசையில் நின்று இருந்தாலும் எல்லோரது ஆசையையும் நிறைவேற்றி உற்சாகப்படுத்திவிட்டு தான் பாடத்தையே அவர் ஆரம்பிக்கிறார்.


Leave a Reply