தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு அதிக மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி

தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் முடிந்து 60 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு அதிக அளவில் மீன் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.ராமேஸ்வரம், பாம்பன் மண்டபம் ஆகிய இடங்களிலிருந்து 2 நாட்களுக்கு முன்பு கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்று கரை திரும்பினர்.

 

1500 விசைபடகுகளில் சென்ற இவர்களுக்கு தலா 500 கிலோ இறால் கிடைத்துள்ளது. இதே போல் நண்டு, கணவாய் உள்ளிட்ட மீன் வகைகளுடன் வந்துள்ளனர். ஆனால் வியாபாரிகள் கூட்டணி அமைத்துக்கொண்டு விலையை குறைத்து வாங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக தமிழகம் முழுவதும் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்க விசைப்படகு மீனவர்களுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதன் பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு அதிக அளவில் மீன் கிடைத்துள்ளதால் விலை குறையும் என்பது அசைவபிரியர்களின் நம்பிக்கை.


Leave a Reply