தோனி அடித்த சிக்ஸ் !! வியந்த கோலி

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் அசத்தலான பேட்டிஙில் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டிருந்த நேரம் தோனி அடித்த சிக்சருக்கு கேப்டன் கோலி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விதம் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டது அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களை முழுதும் நிரப்பியது. கவர் ட்ரைவ்களில் கலக்கி கொண்டிருந்த கோலி தோனி அடித்த சிக்ஸ்சரால் மெய் சிலிர்த்தார்.

 

போட்டியின் போது மைதானத்தில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஆஸ்த்ரேலிய வீரர் ஸ்மித்துக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆராவாரம் செய்தனர். அப்போது சக வீரரை கைதட்டி உற்சாகப்படுத்துமாறு கோலி ரசிகர்களை பார்த்து சைகை செய்தார். இது கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. இந்திய அணி தென்னாப்ரிக்க அணியுடன் விளையாடிய போட்டியி‌ன் போது தோனியின் கீப்பர் கிலௌட்ஸ் பேசும் பொருளாக மாறியது.

 

இதனையடுத்து கீப்பர் கிலௌட்ஸில் உள்ள லட்சனையோடு விளையாட அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் தோனி அணிந்திருந்த கீப்பர் கிலௌட்சில் அந்த முத்திரை தென்படவில்லை. இருப்பினும் மைதானத்திற்க்கு வந்திருந்த ரசிகர்கள் பல அந்த முத்திரை கொண்ட பதாகைகளை தாங்கி இருப்பதை காணமுடிந்தது.


Leave a Reply