பாடப்புத்தகத்தில் இடம்பிடித்த 8 வயது சிறுவன்!

ஈரோட்டை சேர்ந்த 8 வயது சிறுவன் முகமது யாசின் தமது நேர்மையால் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறான். நந்தவன தோட்டத்தை சேர்ந்த முகமது யாசின் அங்குள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது சாலையில் கட்டுக்கட்டாக ஐம்பதாயிரம் ரூபாய் பணத்துடன் பை ஒன்று கிடந்துள்ளது. அதனை பள்ளிக்கு கொண்டு வந்த யாசின் பணத்தை ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளான்.

 

இதனையடுத்து மாணவருடன் மாவட்ட கண்காணிப்பாளரை சந்தித்த ஆசிரியை பணத்தை ஒப்படைதிருக்கிறார். இந்த நேர்மை தான் யாசின் பெயரை பாடப்புத்தகத்தில் இடம் பெற வைத்துள்ளது. இரண்டாம் வகுப்புக்கான தமிழ் ஏட்டில் ஆத்திச்சூடி பாடத்தில் நேர்பட ஒழுகு என்ற தலைப்பின் கீழ் யாசின் படத்துடன் பாடம் இடம் பெற்று இருக்கிறது. நேர்மையாக இருந்தால் உயர்வுகளை எட்டலாம் என்பதற்க்கு சான்றாகி உள்ள சிறுவன் முகமது யாசினுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Leave a Reply