உத்திர பிரதேசத்தில் 2 வயது சிறுமி கொடூர கொலை ! அதிர்ச்சி தகவல்

உத்திரபிரதேசத்தின் அலிகரில் 2 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்று தரவேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன. கடந்த ஞாயிற்று கிழமையன்று 2 வயது குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டு விழிகள் வெளிவர குழந்தை கொடூரமாக கொல்லபட்டு இருந்தது.

 

குழந்தையின் பெற்றோர் வாங்கிய திருப்பிதரவில்லை என்ற விரோதத்தில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த இருவர் குழந்தையை கொன்றதாக கூறப்படுகிறது. குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கில் போட வேண்டும் என நடிகர் அனுப்பம்கேர் வலியுறுத்தியுள்ளார்.

குழந்தையின் பெற்றோர் படும் வேதனையை எண்ணி கூட பார்க்க முடியவில்லை என டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார். அப்பாவி குழந்தையை கொன்ற கொடூரர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டுமென கிரிக்கெட் வீரர் சிக்கர் தவான் வலியுறுத்தியுள்ளார்.

 

இந்த கொடூரத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்றும் பேச்சிழந்து நிற்பதாகாவும் நடிகர் அபிஷேக் பச்சன் வேதனை தெரிவித்துள்ளார். கைதான இருவர் மீதும் தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply