பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியது!

Publish by: --- Photo :


கவுன்ஸ்லிங் மூலமாக பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான கவுன்ஸ்லிங் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநகரம் சார்பில் ஜூலையில் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஒரு லட்சத்து முப்பத்து மூன்றாயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

 

இந்நிலையில் அவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி இன்று தொடங்கியது. வரும் 12 ஆம் தேதி வரை இந்த பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக தமிழகம் முழுவதும் 45 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் தரமணி, கோட்டூர் புரம், பிர்லா கோலரங்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய இடங்களில் சான்றிதழ் சரிபார்க்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

விண்ணப்பித்த மாணவர்கள் எந்த மையத்திற்கு எப்போது வர வேண்டும் என்பதற்கான குறுஞ்செய்தி அவர்களுக்கு தொழில்நுட்ப கல்விஇயக்குநகரம் மூலம் அனுப்பபட்டுள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.


Leave a Reply