இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட இரண்டாம் நிலை ஊராட்சியான வாலாந்தரவை ,இதனை சுற்றி சுமார் 25 கிராமங்கள் உள்ளன. 25.000 பேர் மக்கள் இப்பகுதியில் வாழ்வதாக அறியப்படுகிறது. மேலும் இங்கு 20 வருடங்களுக்கு மேலாக ONGC மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இவர்கள் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், இயற்கை எரிவாயு உட்பட நிலத்தில் இருந்து எடுத்து வருகின்றனர். ஆதலால் இப்பகுதி மக்களின் நிலங்களை கைபற்றி இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் முறையான இழப்பீடு வழங்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர்கள் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இப்பகுதியில் நிலத்தடி நீர் வற்றி,விவசாய நிலங்களை பாழாக்கி, தோல் வியாதிகள், கேன்சர் உட்பட பல வியாதிகளால் சிறியவர் முதல் பெரியவர் வரை பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர் என்றே கூறுகின்றனர்.
தற்போது IOC மூலமாக இங்கிருந்து தூத்துக்குடிக்கு கியாஸ் கொண்டு போகும் திட்டத்திற்க்காக மக்களின் விலை நிலங்களை பயன்படுத்தி வருகின்றனர், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் சிலர் குடும்ப வறுமை காரணமாக நிலங்களை விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வாலாந்தரவை அண்ணா நகர் கிராமத்தின் அருகாமையில் ONGC நிறுவனம் மற்றும் கெயில் நிறுவனம் குழாய்களில் ஏற்பட்ட கசிவால் தீப்பிடித்து பல ஏக்கருக்கு மேல் பணை மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் பாதிக்கு மேலே அழிந்து போனதும் காணமுடிகிறது. மேலும் இப்பகுதியிலன் அருகாமையிலே மக்கள் வாழ்கின்றனர். மேலும் பல கிராமங்கள் இருக்கின்றன, இந்த மாதிரி சம்பவம் அடிக்கடி நடந்து கொண்டே இருக்கிறது என்பதை வலியுறுத்தி பலகட்ங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இப்பகுதி வாழ் மக்கள் புகார் மனு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் இதுபோன்று பயத்தினால் இன்னொரு கதிராமங்களமாக மாறிவிடுமோ என்ற கலக்கத்தில் மக்கள் பீதியில் பயந்துகொண்டு நடுங்குகிறார்கள். எப்ப வேணாலும் கிராமங்கள் அழிந்து போகுமோ என்ற பீதியில் கிராமத்தில் வசிக்கும் மக்கள் உள்ளனர். இப்பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு மக்கள் நலன் கருதி நல்ல முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் சமூக ஆர்வலர்கள்.