இராமநாதபுரம் மாவட்டத்தில் பட்ட பகலில் கொலை

இராமநாதபுரத்தில் பெயின்டர் கொலை. இராமநாதபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் நானா என்ற நாகநாதன், 32. திருமணமாகி 10 ஆண்டுகளான இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

பெயின்டராக வேலை பார்த்த இவர் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கஞ்சா விற்பனையில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக மற்றொரு தரப்பினருக்கும் , நாகநாதனுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில், இராமநாதபுரம் குட்ஷெட் தெருவில் இன்று பகல் 11:30 மணியளவில் இவர் நின்றார். அப்போது அங்கு வந்த 3 பேருக்கும், நாகநாதனுக்கும் இடையேயான முன் விரோதம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஆவேசமடைந்த 3 பேர் நாகநாதனின் மீது நடந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாகநாதன் உடலை, இராமநாதபுரம் டவுன் போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனை அனுப்பினர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Leave a Reply