மண்ணை புண்ணாக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்: பாதிப்புக்குள்ளான பாரதி நகர் 

திருவாடானை அருகே சுகாதாரமற்ற நிலையில் குப்பை தொட்டிகள் நோய் பரவும் அபாயத்தில் பாரதி நகர் பொது மக்கள் உள்ளனர். சுகாதாரத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

 

திருவாடானை தாலுகா, கல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பாரதிநகர் வளர்ந்துவரும் ஊராகும். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  சொந்த வீடு கட்டி வசித்து வருகிறார்கள். பாரதிநகரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாரதிநகர் பேரூந்து நிறுத்தம், தாசில்தார் குடியிருப்பு எதிபுறம் மற்றும் முக்கிய இடங்களில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த குப்பை தொட்டிகளில் இருந்துகுப்பைகளை தினமும் அகற்றாமல் அப்படியே விட்டுவிடுவதால் நிரம்பி வழிவதோடு, ஆங்காங்கே சிதறிகிடக்கிறது. பல மாதங்களாகியும் குப்பைகள் அல்ல படாமல் இருப்பதால்,  குப்பைகள் மலை போல்  குவித்து  உள்ளது.  சில இடங்களில்  தீ வைக்கப்படுகிறது. இதனால் பொது மக்களுக்கு மூச்நு தினறல் ஏற்படுகிறது. 

 

திருவாடானை பகுதிகளில் இயங்கிவரும் பேக்கரி கடைக்கு  பாரதிநகரில் இருந்து தயாரிக்கப்படும் பண்டங்கள்தான் அனுப்பப்படுகிறது. அப்படி தயாரிக்கப்படும் பொழுது ஏற்படும் கழிவுகள் மற்றும் கெட்டுப்போன பண்டங்களையும்  பேரூந்து நிறுத்தம் அருகே உள்ள குப்பை தொட்டியில் கொட்டுவதால், துற்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

திடக்கழிவு மேலாண்மை சார்பில் கட்டப்பட்ட உரக்கிடங்கு பயணற்று கிடக்கிறது. குப்பைகள் அல்லாமலேயே அதற்கான செலவு தொகையை எடுத்து, ஊராட்சி பணத்தை கொள்ளை அடிப்பதாக  இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  மாவட்ட நிர்வாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply