ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது
தூத்துக்குடி மக்களுடைய வாழ்வாதார பாதிப்புக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசுக்கு கோரிக்கை முன் வைத்து பல போராட்டங்களை நடத்திய பொதுமக்கள், கடந்த ஆண்டு மே 22ந் தேதியன்று இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அமைதியான. முறையில் ஊர்வலமாக சென்றுள்ளனர்கள்.
அவர்களிடம் முறையான பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ளார்கள் மற்றும் காவல் துறை தாக்குதலில் பலரும் படுகாயம் அடைந்தார்கள் . இந்த சம்பவம் மிகுந்த துயர சம்பவம் .
இந்த சமம்பவத்தில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்தினருக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் ஆறுதலையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம் மெனவும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடு பட்டவர்களின் மீது போட பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
சுற்றுச் சூழலையும், மக்களின் வாழ்வதாரத்திற்கு பாதிப்பை ஏற்பத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் மெனவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி வழங்கிட வேண்டுமென்றும், உயிரிழந்த 13பேருக்கும் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் மென தமிழக அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் . என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.