வாக்கு எண்ணும் மையம் ரெடி… திருப்பூா் கலெக்டர் பேட்டி..!

Publish by: நமது நிருபர் --- Photo :


திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான, ஓட்டு எண்ணிக்கை, எல்.ஆர்.ஜி., அரசு கல்லுாரியில், நாளை (23ம் தேதி) நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேற்று கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கலெக்டர் பழனிச்சாமி கூறும்போது-

 

ஓட்டு எண்ணிக்கை விதிமுறைகள் குறித்து பேசினர்.ஓட்டு எண்ணிக்கை நடக்கும் கல்லுாரி வளாகத்தின் நுழைவாயிலின் இருபுறமும், 100 மீட்டர் துாரம், வாகன போக்குவரத்தோ, பொதுமக்களோ அனுமதிக்க மாட்டார்கள். மொபைல் போன், சிகரெட் உள்ளிட்ட, தேர்தல் கமிஷன் தடை செய்துள்ள பொருட்கள் அனுமதிக்கப்படாது. வளாகத்தில் உள்ள, மையத்தில், ‘மொபைல்’ போன்களை ஒப்படைத்து செல்ல வேண்டும்.

 

‘மைக்ரோ அப்சர்வர்’ கள் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், தலா, 14 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். ‘மைக்ரோ அப்சர்வர்’, மேற்பார்வையாளர், ஓட்டு எண்ணிக்கை அலுவலர் என, ஒவ்வொரு மேஜையிலும் மூன்று பேர் பணியில் இருப்பர். மொத்தம், 252 பேர் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபட உள்ளனர்.

 

வேட்பாளரின் தலைமை ஏஜன்டுகள், தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் இருந்து, தேர்தல் முடிவுகளை பெறலாம். ஒவ்வொரு தொகுதியிலும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அருகே இருந்தும், ஓட்டு எண்ணிக்கை விவரத்தை பெறமுடியும், ஒவ்வொரு வேட்பாளரும், சட்டசபை தொகுதிக்கு, 14 ஏஜன்டுகளை நியமித்து, ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்கலாம்; குறிப்பெடுக்கலாம். ஏஜன்டுகள், நியமிக்கப்பட்ட மேஜையில் மட்டுமே இருக்க வேண்டும்; மற்ற பகுதிகளுக்கு செல்லக்கூடாது.

 

தபால் ஓட்டு எண்ணிக்கை மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணிக்கை, 8 மணிக்கு துவங்கும். காலை, 8:00 மணிக்கு, வேட்பாளர் முன்னிலையில், ‘ஸ்ட்ராங் ரூம்’ திறக்கப்படும். காலை, 8:00 மணிக்கு, தபால் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். தபால் ஓட்டு எண்ணிக்கை, நான்கு மேஜைகளில் நடக்கும்.சர்வீஸ் வாக்காளர் ஓட்டுக்களை எண்ண, தனியாக ஒரு மேஜை அமைக்கப்பட்டுள்ளது. வேட்பாளரின் ஏஜன்டுகள் முன்னிலையில், தபால் ஓட்டுகள் எண்ணப்படும். தபால் ஓட்டுப்பதிவு பணிகளை நடத்த, பிரத்யேகமாக கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு சுற்றிலும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும் கடைசியாக, ‘விவி பேட்’ ரசீதை எண்ணி முடிவு அறிவிக்கப்படும்.’விவி பேட்’ ரசீதுஎண்ணிக்கைஅனைத்து ‘கன்ட்ரோல் யூனிட்’டில், ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு, ‘விவி பேட்’ மெஷினில் வரும் ரசீதுகள் எண்ணப்படும். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், தலா, ஐந்து ஓட்டுச்சாவடிகள், குலுக்கல் முறையில் செய்யப்படும். அனைத்து சீட்டுகளும் எண்ணப்பட்டு, வேட்பாளர் பெற்ற ஓட்டு விவரம் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும்.

 

சுற்றுவாரியாக பதிவான ஓட்டு விவரம், அறிவிப்பு பலகையில் எழுதப்படும். சட்டசபை தொகுதி வாரியாக பெறப்படும் எண்ணிக்கை விவரத்தை தொகுத்து, வேட்பாளர் பெற்ற ஓட்டு விவரம், பொதுமக்களுக்காக, ‘மைக்’ மூலம் அறிவிக்கப்படும். தபால் ஓட்டுக்களை சேர்த்து, இறுதியாக வெற்றி பெற்ற வேட்பாளர் விவரம் அறிவிக்கப்படும் என தெரித்தார்.

 

மேலும் திருப்பூர் லோக்சபா தொகுதியை பொருத்தவரையில் 1704 வாக்கு சாவடிகளில் பதிவான ஓட்டுப்பதிவுகள் சட்டசபை தொகுதிவாரியாக பெருந்துறை 19 சுற்றுக்களாகவும், பவானி 21சுற்று அந்தியூர் 19, கோபி 22, திருப்பூர் வடக்கு 26, தெற்கு 17 சுற்றுக்களாக எண்ணப்படவுள்ளது. நேற்றுவரை 4290 தபால் ஓட்டுக்கள் இதுவரை வரப்பெற்றுள்ளது. அதில் 104 சர்வீஸ் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது தபால் ஓட்டுக்களைப்பொருத்தவரை நாளையும் ( இன்று) வரப்பெறும் அந்த ஓட்டுக்களும் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது என தெரிவத்தார்.


Leave a Reply