இன்றைய ராசி உங்களுக்கு எப்படி..?

அனைவருக்கும் அன்பான காலை வணக்கம்.
இன்று 20 -05-2019 திங்கள்கிழமை ராசிபலன்
என்ன என்பதை பார்க்கலாம்

மேஷ ராசி 
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் சங்கடங்கள் உண்டாகும். உடல்நிலை மந்தமாக இருக்கும். குடும்ப சுபகாரியங்களில் கவனமாக கையாள வேண்டும். மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது நல்லது.

 

அதிர்ஷ்ட திசை கிழக்கு
அதிர்ஷ்ட எண் 1
அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு

ரிஷப ராசி 
இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவு ஏற்படும். முக்கிய மனிதர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகலாம். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களால் தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

 

அதிர்ஷ்ட திசை கிடக்கு
அதிர்ஷ்ட எண் 9
அதிர்ஷ்ட நிறம் அடர் சிவப்பு

மிதுன ராசி 
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். செய்யும் வேலைகள் அனைத்தும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமை குறையும். நண்பர்களின் உதவியால் தொழில் இருந்த பிரச்சினை நீங்கும். சுப காரியங்கள் கை கூடும்.

 

அதிர்ஷ்ட திசை மேற்கு
அதிர்ஷ்ட எண் 3
அதிர்ஷ்ட நிறம் இளம் மஞ்சள்

கடக ராசி 
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும்.தொழில்ரீதியாக எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். வேலையில் மேலதிகாரியுடன் இருந்த பிரச்சனை தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.பொருள்கள் வாங்குவது திருப்திகரமாக இருக்கும் .வருமானம் அதிகரிக்கும்.

 

அதிர்ஷ்ட திசை மேற்கு
அதிஷ்ட எண் 1
அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

சிம்மம் ராசி 
இன்று நீங்கள் செய்யும் சேவைகள் எல்லாம் வெற்றி கிட்டும். பிள்ளைகள் வழியில் சுப செய்தி வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

 

அதிஷ்ட திசை வடக்கு
அதிர்ஷ்ட எண் 4
அதிர்ஷ்ட நிறம் சாம்பல் நிறம்

கன்னி ராசி
உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். புதிய சொத்துக்கள் வாங்க இன்று அனுகூலமான நாள்.

 

அதிர்ஷ்ட திசை வடக்கு
அதிர்ஷ்ட எண் 2
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

துலாம் ராசி 
இன்று பணம் வரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். நண்பர்களின் ஆலோசனையால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.வழக்கு விஷயங்களில் அலைச்சலுக்கு ஏற்ப அனுகூலம் கிட்டும்.

 

அதிர்ஷ்ட திசை தெற்கு
அதிர்ஷ்ட எண் 6
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

விருச்சிக ராசி 
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற பலன் கிடைக்கும்.பிள்ளைகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

 

அதிர்ஷ்ட திசை மேற்கு
அதிர்ஷ்ட எண் 8
அதிர்ஷ்ட நிறம் நீல நிறம்

தனுசு ராசி 
இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். திடீரென்று சில செய்திகள் வந்து சேரும்.அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் நட்பு ஏற்படும். திருமண நிகழ்ச்சி தொடங்க அனுகூலமான நாள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் வந்து சேரும்.

 

அதிர்ஷ்ட திசை தெற்கு
அதிஷ்ட எண் 5
அதிர்ஷ்ட நிறம் இளம் பச்சை

மகர ராசி 
உங்களுக்கு பண வரவு அமோகமாக இருக்கும். புதிய பொருள்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியரிடம் ஒற்றுமை நிலவும்.உறவினர்கள் மூலம் சுபசெய்தி கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

 

அதிஷ்ட திசை கிழக்கு
அதிர்ஷ்ட எண் 3
அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

கும்ப ராசி 
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சி நிகழ்வு நிகழ்வும். மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.வீண் செலவுகளை தவிர்ப்பது மூலம் சேமிப்புகள் உயரும். தொழில் மூலமாக ஏற்படும் பயணங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

 

அதிர்ஷ்ட திசை
கிழக்கு அதிர்ஷ்ட எண் 7
அதிர்ஷ்ட நிறம் பல வண்ணங்கள்

மீன ராசி 
பிள்ளைகளால் அலைச்சலும் டென்ஷனும் அதிகரிக்கலாம். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும்.குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.வேலையில் இதுவரை இருந்துவந்த பிரச்சினை சற்று குறையும். சுப காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

 

அதிர்ஷ்ட திசை வடக்கு
அதிர்ஷ்ட எண் 5
அதிர்ஷ்ட நிறம் இளம்பச்சை

 

இன்றைய நாள் அனைத்து இனிய நாளாக அமைந்திட வாழ்த்துக்கள். உங்களது நண்பர்களுக்கும் உறவினருக்கும் பகிர ஷேர் செய்யவும்.


Leave a Reply