நரேந்திர மோடியின் எடுபிடி தான் அதிமுக அரசு! சூலூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!!

Publish by: நமது நிருபர் --- Photo : -கோவை விஜயகுமார்


நரேந்திர மோடியின் எடுபிடியாக இருக்கும் அதிமுக ஆட்சியை அகற்றப்பட வேண்டும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

 

சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரித்து, கோவை மாவட்டம் முத்துக்கவுண்டன்புதூர் பகுதியில் , அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், மோடி ஆட்சி ஒரு நிமிடம் கூட நீடிக்ககூடாது; உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து மக்கள் வாக்களித்துள்ளனர். மோடியின் எடுபிடியாக இருக்கும் அதிமுக ஆட்சியை அகற்ற இடைத்தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்.

 

 

ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி எல்லா தரப்பு மக்களுக்கும் பல திட்டங்களை தந்தவர் . இப்பகுதியில் உள்ள ஆ ச்சான் குளத்தை தூர்வாரி, குடிநீர் தட்டுப்பாட்டை நீக்குவோம். நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். பத்தாம் வகுப்பு படித்த ஒரு கோடி பேருக்கு சாலை பணியாளர் வேலை வழங்கப்படும்.

 

அத்துடன், கேஸ் சிலிண்டர், கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும். 5 பவுன் வரை தங்க நகை கடன், மாணவர் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று, ஸ்டாலின் வாக்குறுதியளித்து பேசினார்.


Leave a Reply