குடிநீர் பிரச்சனையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை! முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்பு படம்


தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை போக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக, மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

 

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசனின் பேச்சு குறித்து, எந்த அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவிக்காமல் இருந்தால் நல்லது என, உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறி உள்ளது. எனவே, அதுபற்றி நான் கருத்து கூற இயலாது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பேசினால் நன்றாக இருக்கும்.

 

தமிழகத்தில் கோடை காலத்தில் நிலவும் குடி நீர் தட்டுப்பட்டை போக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு முன்பே இது குறித்து ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

 

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அரசின் தலையீடு இருப்பதாக சூரப்பா கூறுவது தவறு என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.


Leave a Reply