கேள்வி கேட்டு தெறிக்க விட்ட ‘குடி’மகன்! அப்-செட் ஆகி நடையை கட்டிய ஸ்டாலின்!!

சூலூர் தொகுதி திண்ணை பிரசாரத்தின் போது, மதுபோதையில் ‘குடி’மகன் கேட்ட கேள்வியால் மு.க.ஸ்டாலின் அப்செட் ஆகி, வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

கோவை மாவட்டம் சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து, மு.க. ஸ்டாலின் நேற்றும், இன்றும் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். வழக்கம் போல் டிராக் சூட், டீ சர்ட் அணிந்து கொண்டு அப்பநாயக்கன்பட்டியில் வாக்கிங் சென்று வாக்குகளை சேகரித்தார்.

 

அதை தொடர்ந்து, நடைபெற்ற திண்ணை பிரச்சாரத்தில் பொதுமக்களை சந்தித்த ஸ்டாலின், அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆதி திராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வாக்கிங்சென்ற ஸ்டாலின், அங்குள்ள ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து டீ சாப்பிட்டார்.

 

 

அந்த நேரத்தில், யாரும் எதிர்பார்க்காத நிலையில் மதுபோதையில் இருந்த ஒருவர், ஸ்டாலினை நோக்கி பேச தொடங்கினார். சாதாரணமாக ஏதாவது கோரிக்கை தான் விடுப்பார் என்று நினைத்து, அவரது பேச்சை ஸ்டாலின் கேட்க தொடங்கினார்.

 

ஆனால் அந்த ‘குடி” மகனோ, “எங்கள் பகுதி பள்ளத்தில் உள்ளது. கடந்த மழையின் போது வெள்ளம் வந்து, வீடுகளை விட்டு ரோட்டில் அனாதை போல் தஞ்சமடைந்தோம். அப்போது எங்களை பார்க்க வராத நீங்கள், ஓட்டு கேட்டு இப்போது மட்டும் ஏன் வந்தீர்கள் ” என்று கேட்டார்.

 

இதை என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்தார்; உடனடியாக அப்பகுதியில் இருந்து வெளியேறி, வாக்குகளை சேகரிக்க அடுத்த பகுதிக்கு சென்றுவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Leave a Reply