சினிமா வசனம் போல் கமல் பேசி இருக்கக்கூடாது! சர்ச்சை பேச்சு குறித்து டிடிவி தினகரன் கருத்து

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்பு படம்


இந்து தீவிரவாதி என்று சினிமா வசனம் போல் நினைத்து கமல் பேசியிருக்கக் கூடாது என்று, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

 

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஷாகுல் ஹமீதை ஆதரித்து, அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

 

எந்த மதத்தையும் யாரும் புண்படுத்தக்கூடாது; ஒருவர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த மதத்தை பழி சொல்லக்கூடாது. சினிமாவில் வசனம் பேசுவது போல் நினைத்து, இந்து தீவிரவாதி என்ற கருத்தை கமல் தெரிவித்திருக்கிறார். இது முற்றிலும் தவறு என்றார்.