ஆளும் கட்சியும், ஆண்ட கட்சிகளும் மக்களுக்கு என்ன செய்தன? நடிகை கோவை சரளா நறுக் கேள்வி

இதுவரை நாட்டை ஆண்ட கட்சிகளும், ஆண்டு வரும் கட்சியும் மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று, சூலூர் தேர்தல் பிரசாரத்தில் நடிகை கோவை சரளா பேசினார்.

 

சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சித்தலைவர் சூலூரில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் மயில்சாமியை ஆதரித்து, திரைப்பட நடிகையும், அக்கட்சியின் நிர்வாகியுமான கோவை சரளா, நீலாம்பூர், ஏ.ஜி.புதூர், ராவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

அவர் பேசியதாவது: ஒருவர் ஸ்விஸ் வங்கி கறுப்பு பணத்தை மீண்டு வந்து, வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடுவதாக சொன்னார். இதுவரை 10 பைசா கூட போடவில்லிய. அடுத்து இன்னொருவர், மாதம் 6 ஆயிரம் ரூபாய் வீதம் 12 மாதத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் கொடுக்கப் போவதாக, கிளம்பி இருக்கிறார்.

 

 

கடந்த 5 வருடத்திற்கு முன்பு, 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, காங்கிரஸ் கட்சி அதை செய்திருக்கலாமே. தமிழ்நாட்டில் ஒருவர், விடியற்காலையிலேயே வாக்கிங் என்ற பெயரில், வாக்கு சேகரிக்கிறார். டீக்கடையில டீ குடிப்பார்.

 

மதியம் அதே பகுதியில் ஓட்டலில் சாப்பிடுவார். அங்கேயே ஓட்டும் கேப்பார். எல்லாம் எலக்ஷன் செய்யும் மாயம். தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், பிறகு சொத்து சேர்க்கும் பணியில் குடும்பத்தாருடன் ஈடுபடுவார்கள் என்று பேசினார்.


Leave a Reply