திருவீதி உலா வந்து அருள்பாலித்த ஆதிரெத்தினேஸ்வரர் ஸ்வாமி!

Publish by: நமது நிருபர் --- Photo : அனல் ஆனந்த்


திருவாடானை அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவில், ஆறாம் நாள் திருவீதி உலா நடைபெற்றது.

 

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தின் கீழ், அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு தற்போது, வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது.

 

இந்த விழாவின் ஆறாம் நாள் வைபவத்தில், சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆதிரெத்தினேஸ்வர சுவாமி, அன்ன வாகனத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டு, விநாயகர் முன்வர, பரிவார தெய்வங்களுடன் சுவாமி பல்லக்கு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.