உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு உயிைரை மாய்த்துக்கொள்ள துணிந்த கள்ளக்காதல் ஜோடி… காதலன் பலி! காதலி பலத்த காயம்

கோவையில் கணவன், குழந்தைகளை விட்டு விட்டு கள்ளக் காதலனோடு ஓடிப்போய் லாட்ஜில் ரூம் போட்டு நான்கு நாட்கள் உல்லாச வாழ்க்கை அனுபவித்துவிட்டு,பர்ஸ் காலியானதும் அந்த ஜோடிகளின் விபரீத முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை சிங்காநல்லூர் ஆனையங்காட்டை சேர்ந்தவர் மருதாசலம்.இவரது மகன் மதன்குமார் கட்டிட தொழிலாளி.திருமணம் ஆகாத இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜ் என்பவரின் மனைவி கீர்த்தனாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

 

இதனால் அவர்கள் இருவரும் பலமுறை தனியாக சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இது சவுந்தர்ராஜுக்கு தெரிய வந்தது. உடனே அவர், தனது மனைவி கீர்த்தனாவிடம் நமக்கு கல்யாணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நீ இப்படி வேறு ஒருவருடன் பழகுவது வெளியே தெரிந்தால் அசிங்கம் ஆகி விடும். எனவே,மதன்குமாரை இனிமேல் சந்திக்க கூடாது என்று அறிவுரை கூறியுள்ளார்.

 

இருந்தும் கீர்த்தனாவோ கணவன் சொன்னதை கண்டுகொள்ளாமல் மதன்குமாரை தொடர்ந்து சந்தித்து உள்ளார். இதனால் மீண்டும் சவுந்தர்ராஜ் தனது மனைவியை கடுமையான வார்த்தையால் பேசி கண்டித்துள்ளார்.

 

இதுபற்றி கீர்த்தனா தனது கள்ளக்காதலனிடம் தெரிவித்துள்ளார். கள்ளக்காதலனோ நாம் இங்கு இருந்தால் சேர்ந்து வாழ விடமாட்டார்கள், நீ உனது குடும்பத்தை விட்டு விட்டு வந்து விடு, நாம் வேறு எங்காவது சென்று வாழலாம் என்று கீர்த்தனாவிடம் கூறி உள்ளார்.

 

அதன்படி,அவர்கள் 2 பேரும் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி வெளியூர் சென்றுஉள்ளனர்.தனியார் விடுதியில் ரூம் போட்டு தங்கி உல்லாசமாக பொழுதை கழித்துள்ளனர். கையில் இருந்த பணம் செலவழிந்ததும் செய்வது அறியாமல் திகைத்த அவர்கள், 2 பேரும் நேற்று முன்தினம் காலையில் கோவை சிங்காநல்லூர் வந்து பேருந்து நிலையத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

 

அப்போது, இனிமேல் நாம் வீட்டிற்கு போனால் வீட்டில் ஏற்க மாட்டார்கள்.எனவே, தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து, பேருந்து நிலையத்தில் இருந்து சிங்காநல்லூர் மயானத்துக்கு பின்புறம் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் சிறிது தூரம் பேசிக்கொண்டே நடந்துள்ளனர்.

 

இதற்கிடையில், அந்த வழியாக ஒரு ரெயில் வந்தது. உடனே, அவர்கள் இருவரும் தங்களின் கைகளை கோர்த்துக்கொண்டு அந்த ரெயில் முன்பு பாய்ந்தனர். இதில் மதன்குமார் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.தலையில் படுகாயம் அடைந்த கீர்த்தனா வலியால் அலறி துடித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர்.

 

இதனையடுத்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மதன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த கீர்த்தனாவும் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


Leave a Reply