கொலை செய்ய துணிந்தாரா நடிகர் பார்த்திபன்? காவல் நிலையத்தில் உதவியாளர் பகீர் புகார்!

நடிகர் பார்த்திபன் தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்கியதாக, அவரது உதவியாளர் ஜெயம்கொண்டான் என்பவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவர், நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். இவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர், ஜெயம்கொண்டான். பார்த்திபனின் திருவான்மியூர் வீட்டில் திருடு போனது.

 

இதற்கிடையே, நகை திருடு போன விவகாரத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட சிலருடன் உதவியாளர் ஜெயங்கொண்டான் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இது, பார்த்திபனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது; அவரை பணியில் இருந்து பார்த்திபன் நீக்கினார்.

 

இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஃபோர்பிரேம்ஸ் அலுவலகத்திற்கு தம்மை வரவழைத்து தாக்கியதாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் பார்த்திபன் மீது கொலை முயற்சி புகாரை, ஜெயம்கொண்டான் அளித்துள்ளார். பணிநீக்க காரணத்தை கேட்டபோது பார்த்திபனும், உதவியாளரும் தாக்கியதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

இதுகுறித்து பார்த்திபன் தரப்பில் கேட்டபோது, நகை திருட்டில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்ததால், அதை திசைதிருப்ப இவ்வாறு புகார் அளித்திருப்பதாக கூறினார்.


Leave a Reply