உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்! மனுவை தள்ளுபடி செய்தது சிறப்பு விசாரணை குழு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்ச நீதிமன்ற பெண் ஊழியர் தெரிவித்த புகார் மனுவை, சிறப்பு விசாரணை குழு இன்று தள்ளுபடி செய்தது.

 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர், நீதியரசர் ரஞ்சன் கோகாய். இவர் மீது முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், பாலியல் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். தம்மீதான புகாரை விசாரிக்க, தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் சிறப்பு குழுவை நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமித்தார்.

 

இந்த சிறப்பு விசாரணை குழுவில் நீதிபதி ரமணா மற்றும் பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோருடம் இடம் பெற்றனர். இக்குழு, தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரை விசாரித்த நிலையில், அதில் முகாந்திரம் இல்லை என கூறி புகார் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. எனினும், விசாரணை குழுவின் அறிக்கை பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.


Leave a Reply