நடிகர்கள் சரத்குமார், ராதாரவி கைதாக வாய்ப்பு? அப்படியென்ன செய்தார்கள் இருவரும்…

Publish by: --- Photo :


நடிகர்கள் சரத் குமார், ராதாரவி ஆகியோரை கைது செய்து விசாரிக்கும்படி, நடிகர் சங்க நிலமோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலம் என்ற இடத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை, பதவியில் இருந்த போது நடிகர்கள் சரத்குமார், ராதாரவி இருவரும் போலி ஆவணங்கள் மூலம் விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

இது குறித்து, நடிகர் விஷால் தரப்பில் 2017இல், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. எனினும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

 

இதை விசாரித்த நீதிமன்றம், புகாரில் முகாந்திரம் இருப்பின் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும் படி, போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் போலீசார், கடந்தாண்டு ஜூன் மாதம் சரத்குமார், ராதாரவி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தது.

 

எனினும், இவ்வழக்கு சரிவர விசாரிக்கப்படவில்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை நடிகர் விஷால் நாடினார். இவ்வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்து விசாரிக்கும்படி காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.

 

 

இவ்வழக்கில் மூன்று மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த நிலமோசடி வழக்கில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி கைதாகும் வாய்ப்புள்ளது.


Leave a Reply