136 பயணிகளுடன் ஆற்றில் ‘நீந்திய’ விமானம்! பாதிப்பின்றி பயணிகள் தப்பிய அதிசயம்

அமெரிக்காவில், 136 பயணிகளுடன் சென்ற விமானம், எதிர்பாராதவிதமாக ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

 

அமெரிக்காவில், 136 பயணிகளுடன் சென்ற போயிங்-737 ரக விமானம் ஒன்று, புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில்லில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, எதிர்பாராத விதமாக தடுமாறி விமான நிலையம் அருகே இருந்த ஆற்றில் பாய்ந்து, விபத்துக்குள்ளாகியது. என்ன நடந்தது என்று புரியாமல் பயணிகள் கதறினர்.

 

ஆழமற்ற பகுதியில் விமானம் பாய்ந்ததால், நீரில் மூழ்கவில்லை. இதன்காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. விமானப் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உள்ளூர் நேரப்படி, இரவு 9.40 மணியளவில் நடந்த இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.


Leave a Reply