3 கண் உடைய அதிசய பாம்பு கண்டுபிடிப்பு! உலகின் அழிவிற்கான அறிகுறியா இது?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Agency


மூன்று கண்களை உடைய அதிசய பாம்பு ஒன்று, ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில், ஆர்ன்ஹெம் நெடுஞ்சாலையில், வனவிலங்கு பூங்கா பராமரிப்பாளர்கள், கடந்த மார்ச் மாதம் வினோத பாம்பு ஒன்றை கண்டு ஆச்சரியப்பட்டனர். காரணம், அதற்கு 3 கண்கள் இருந்தது தான்.

 

நெடுஞ்சாலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாம்பு, கார்பெட் மலைப்பாம்பு வகையை சேர்ந்தது; ஆண் பாம்பு ஆகும். அதன் மூன்றாவது கண், மற்ற இரண்டு கண்களை போலவே இயல்பாக செயல்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே, இந்த பாம்பு சீக்கிரம் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

இந்த பாம்பு குறித்து வடக்கு மண்டல வனவிலங்கு பூங்கா நிர்வாகம், தனது முகநூல் பக்கத்தில், ‘இது, வறட்சி, பஞ்சம் நிலவப்போவதற்கான அறிகுறியாகும். இது 40செ.மீட்டர் நீளம் உள்ளது. இயற்கையில் ஏதோ மாற்றம் நிகழப்போகிறது என்பதை உணர்த்தவே இந்த பாம்பு வெளிப்பட்டிருக்கிறது’ என கூறப்பட்டுள்ளது.

 

மூன்று கண் உடைய பாம்பின் வெளிப்பாடு, பூமியில் ஏதோ கெட்டது நடப்பதற்கான அறிகுறி என்றும், இது அழிவுக்கான ஆரம்பம் என்றும் சமூக வலைதளங்களில் ஜோதிடர்கள் பலர் ஆரூடம் சொல்ல தொடங்கிவிட்டனர். அறிவியலாளர்களோ, இது இயற்கையான மரபணு மாற்றத்தால் உண்டான கண்ணாக இருக்கலாம் என்று விளக்கம் தந்துள்ளனர்.


Leave a Reply