மோடியிடம் ஓ.பி.எஸ். பயப்பட இதுதான் காரணம்? டி.ஆர். பாலு ஆவேச குற்றச்சாட்டு!

மோடியை பார்த்து ஓ.பி.எஸ். பயப்படுகிறார்; தான் செய்த தவறுகளில் இருந்து தன்னையும், தன் குடும்பத்தினரையும் காப்பாற்றிக் கொள்வதற்காகவே பயப்படுகிறார் என்று திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு பேசினார்.

 

சூலூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வந்த அக்கட்சியின் முதன்மை செயலாளர் டி.ஆர். பாலு, கருமத்தம்பட்டியில் செயல்பட்டு வரும் விசைத்தறிக்கூடங்களை பார்வையிட்டு, அங்கு வாக்கு சேகரித்தார். பின்னர்,செய்தியாளர்களுக்கு அவர் அளித்த் பேட்டி:

 

விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள், திமுகவிற்கு வாக்களிக்க உறுதி அளித்துள்ளனர். நிச்சயமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். திமுகவின் வெற்றி வாய்ப்பு மிகபிரகாசமாக உள்ளது. உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வராவது உறுதி.

 

திமுகவிற்கும், அமமுகவிற்கும் ரகசிய உறவு உள்ளதாக, தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். அவருக்கு ரகசிய உறவு,இருட்டறை பேரங்கள் பேசுவதில் கை தேர்ந்தவர். தான் செய்த தவறுகளில் இருந்து தன்னையும், தனது குடும்பத்தினரையும் காப்பாற்றிக் கொள்ளவே பிரதமரை பார்த்து, துணை முதல்வர் ஓ.பி.எஸ். பயப்படுகிறார் என்று டி.ஆர். பாலு குறிப்பிட்டார்.


Leave a Reply