இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வருடாந்திர முடிவு தினமாக வழக்கறிஞர்கள் இடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வழக்கறிஞர் கணேஷ் தலைமையில் ஒரு அணியாகவும் மற்றொரு அணியாக வழக்கறிஞர் சுரேஷ்குமார் தலைமையிலும் போட்டி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தலைமையிலும் நம்பு நாயகம் முன்னிலையிலும் நடைபெற்றது மேலும் இரண்டு அணிகளுக்கும் பரிசு கோப்பைகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் வழங்கினார் இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.இதனால் நீதிமன்ற வளாகம் கலகலப்பாக காணப்பட்டது.