ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்! அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு!

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

 

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளது.

 

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களுக்கு கருணை காட்டக் கூடாது. ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்களுக்கு 2 வாரங்களில் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு, நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

 

தகுதித் தேர்வு எழுதி 60 ஆயிரம் பேர் வேலைக்கு காத்திருக்கும் நிலையில் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க எந்த காரணமும் இல்லை எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

தகுதித் தேர்வு எழுதுவதற்கு 8 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும், அதை முடிக்காதவர்களுக்கு எவ்வித கருணை காட்ட முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.


Leave a Reply