இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை பண்ணவயலில் .அமைந்திருக்கும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் உற்சவ விழா கடந்த ஏப்ரல்22 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மாரியம்மனுக்கு ஒவ்வொரு நாடும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அதனைத் தொடர்ந்து வீதி உலாவும் நடைபெற்றது நேற்று செவ்வாய்க்கிழமை திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அதனைத் தொடர்ந்து இன்று முளைப்பாரி பெண்கள் தங்களது தலையில் ஏந்தி ஊர்வலமாக சென்று முனியய்யா கோவிலில் வைத்து வழிபட்டனர். ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்ற காட்சி வண்ணமயமாக இருந்தது.