திமுக ஆட்சி அமைக்கும் என்பது சிறந்த நகைச்சுவை! துரைமுருகனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

தமிழகத்தில், 25 நாட்களில் திமுக ஆட்சி அமைக்கும் என்று துரைமுருகன் கூறிவருவது இந்தாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை, என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

 

கோவை மாவட்டம் சூலூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், திமுக பொருளாளர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். அப்போது, அடுத்த 25 நாட்களில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என்று, சவால் விடும் வகையில் பேசி இருந்தார்.

 

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார், இதற்கு பதிலடி தந்துள்ளார். அவர் அளித்த பேட்டி:

 

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என துரைமுருகன் பேசி இருப்பது, இந்தாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை என்று கூறலாம். கற்பனையில் யார் வேண்டுமானாலும் மூழ்கி இருக்கலாம். திமுகவின் பி-டீம் ஆக டிடிவி.தினகரன் செயல்படுகிறார்.

 

விளையாட்டு துறைக்கு அதிமுக அரசு எப்போதுமே மிகுந்த முக்கியத்துவம் தந்துள்ளது. தற்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. அது தளர்த்தப்பட்ட பின், தடகளத்தில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதிக்கு, அவர் விரும்பும் அளவுக்கு தமிழக அரசு உதவி செய்யும் என்று கூறினார்.


Leave a Reply