கோவையில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பூசாரி போக்சோ சட்டத்தில் கைது

கோவையில் 8-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோவில் பூசாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

 

கோவையை அடுத்துள்ள கோவில்பாளையம் அருகே உள்ளது கொண்டையம் பாளையம் கிராமம். இங்கு உள்ள மாரியம்மன் கோவில் பூசாரியாக தண்டபாணி (65) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மாலையில் கோவிலின் அருகே விளையாடி கொண்டு இருந்த அதே கிராமத்தை சார்ந்த  8 வயது பெண் குழந்தையை கோவிலின் உள்ளே அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

 

இதையடுத்து,குழந்தை உடலில் ஏற்பட்ட வலியால் துடித்ததை பார்த்த பெற்றோர் குழந்தையை மருத்துமனைக்கு எடுத்துச்சென்று பார்த்த போது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று குழந்தையின் தாய் சம்பவம் தொடர்பாக  கோவில் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட காவல் ஆய்வாளர் விசாரித்து குற்றத்தை உறுதி செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தார்.

 

இதனையடுத்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் விசாரித்து கோவில் பூசாரி தண்டபாணியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Leave a Reply