கொங்கணகிரி கந்தப் பெருமான் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கு நகரில் உள்ள கந்தப்பெருமான் கோவில் கும்பாபிஷேக விழா இன்று கோலகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேக திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக இன்று காலை 6 மணிக்கு 6-ம் கால யாக பூஜை நடந்தது.
இதனைத்தொடா்ந்து காலை 8.45 மணிக்கு மஹாபூர்ணாஹூதி, தீபாராதனையுடன் கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 9.30 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத கந்தபெருமான் கோவில் விமானம், நூதன ராஜகோபுரம், மூலஸ்தான கோபுரம் மற்றும் மூலாலய பரிவார மூர்த்திகளுக்கு திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை 7 மணி முதல் லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மகா அபிஷேகம், திருக்கல்யாணம், கந்தபெருமான் திருவீதி உலா ஆகியவையும் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சி, கும்மியாட்டமும், ஆன்மிக சொற்பொழிவு, காவடியாட்டம், சிறப்பு விருந்தினர்களுக்கு பாராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள் :


Leave a Reply