கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: 3 ஆயுள் தண்டனை விதித்து ” தடாலடி ” தீர்ப்பு

Publish by: கோவை விஜயகுமார் --- Photo : வி.கே


கோவை ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் பகுதியை சேர்ந்தவர்கள் நாகப்பன்,உஷா தம்பதி.இவர்களுக்கு 5 வயதுள்ள சிறுமி உள்ளார்.தம்பதியினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நாகப்பனை பிரிந்து உஷா மகேந்திரன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் திருமணத்தின் மூலம் பிறந்த 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து காட்டூர் காவல் நிலையத்தில் உஷாவின் இரண்டாவது கணவர் மகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கோவை 4 வது மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.


இந்த நிலையில் இன்று இவ்வழக்கின் தீர்ப்பினை 4 வது மகிளா நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ஸ்ரீதேவி வழங்கினார். அதன்படி நாகப்பன்,உஷா தம்பதி5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ஆர். எஸ்.புரத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து 4 வது நீதிமன்ற நீதிபதி பொறுப்பு ஸ்ரீதேவி ” தடாலடி ” தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை என்று கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாலியல் வன்கொடுமை செய்து 5 வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply