கோமாளி வேடமிட்டு வேட்பாளர் மனுதாக்கல்! சூலூரில் தான் இந்த கலாட்டா!

Publish by: --- Photo : -கோவை விஜயகுமார்


சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு, கோமாளி வேடமிட்டு மனுதாக்கல் செய்ய வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 38 மக்களவைத்தொகுதி மற்றும் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்றது.

 

சூலூர், அரவக்குறிச்சி,ஒ ட்டபிடாரம், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், மே மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.

 

முதல் நாளான இன்று, தமிழக கள் இயக்கத்தின் சார்பில் திருப்பூரைச்சேர்ந்த கதிரேசன் ,கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த நூர் முகமது ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இதில், நூர் முகமது கோமாளி வேடமிட்டு மனுத்தாக்கல் செய்து, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

 

இத்தொகுதியில் அமமுக சார்பில் முன்னாள் எம்.பி யும்,கோ வை புற நகர் மாவட்ட செயலாளருமான சுகுமார், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.


Leave a Reply