திருவாடானையில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் போக்குவரத்து நெரிசல்

Publish by: --- Photo :


திருவாடானையில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் போக்குவரத்து நெரிசல்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஆணையர்கள் தாங்கள் இளநீர் குடிப்பதற்காக தனது அலுவலக வாகனத்தை எடுத்து வந்து ரோட்டில் நடுவிலேயே நிறுத்தி இளநீர் அருந்தி விட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அரசு சட்ட திட்டங்களை மதிக்க வேண்டிய அதிகாரிகள் இப்படி சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொள்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இடம் : மதுரை – தொண்டி தேசிய நெடுஞ்சாலை விருவாடானை SBI ATM எதிரில்
இன்று 15.04.2019 ம் தேதி நேரம் 12:09

அனல் ஆனந்த் ஆடானை