தமிழத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக்கூடும் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தனியார் வானிலை ஆய்வாளரான வெதர்மேன் பிரதீப் ஜான், தனது முகநூலில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்குள் கோடை மழையை எதிர்பார்க்கலாம். இடியும் கூடிய இந்த மழை, ஓரளவு நன்றாக பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் உள் மாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் இரு தினங்களில் இடியுடன் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
எனினும் இந்த மழை தொடர்ச்சியாக பெய்யாது. ஓரிரு நாட்களுக்கு மட்டுமே மழை இருக்கும். சென்னை நகரில் மழை பெய்ய வாய்ப்பில்லை; மாறாக வெப்பம் அதிகரித்த நிலையிலேயே காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில், கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல், பலருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.