நாட்டின் காவலாளிக்கும், களவாணிக்கும் இடையே நடக்கக்கூடிய தேர்தல் – பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் பேச்சு

தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற உள்ள தேர்தலுக்களுக்கான பிரச்சாரம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் தேர்தல் களம் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூடு பிடித்துள்ளது.

 

இந்த நிலையில் கோவை மாவட்டம் காரமடையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நீலகிரி தொகுதியின் அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து பா.ஜ.க- வின் மூத்த தலைவரும்,தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் பரப்புரையில் ஈடுபட்டார்.

 

அப்போது அவர் பா.ஜ.க வுடன் அதிமுக வைத்துள்ள கூட்டணி வைத்திருப்பது அரசியலுக்கான கூட்டணி அல்ல, கொள்கை ரீதியான கூட்டணி. கூட்டணியில் உள்ள அனைவருமே ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளை தக்க வைக்க மீண்டும் போட்டியிடுவதாகவும் பேசினார்.

 

மேலும், ஸ்டாலின் குறித்து பேசுகையில், எதிர்க்கட்சித்தலைவராக உள்ளவர் பொறுப்பில்லாமல் பேசி வருவதாகவும், பெரிய தலைவரின் மகன் அரசியல் மாண்பை கற்றுத்தராமல் சென்றுவிட்டதாகவும், அதனால் தான் அவர் உயிரோடு இருக்கும் வரை திமுக தலைவராக நியமிக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

 

தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் பிரிவினை வாதம் வென்றுவிட்டது, நாத்திகம் வென்றுவிட்டது என்றும் பேசிவருவார்கள். ஒரு திருமண நிகழ்வில் பேசிய ஸ்டாலின் அங்கும் ஒரு தலைவர் போல பேசாமல் தலைவருக்கு உரிய தகுதியை மீறி இந்து மதம் குறித்து தரம் தாழ்த்தி பேசி வருவதாகவும், அதைப்போலவே திராவிடர் கழகத்தின் தலைவர் என்பதை மறந்து விட்டு கிருஷ்ணரை பற்றி தரம் தாழ்ந்து பேசிவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

 

பா.ஜ.க ஆட்சியில் பாகிஸ்தான் அடங்கி, ஒடுங்கி உள்ளதாகவும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மும்பை, கோவை பகுதிகளில் குண்டு வெடிப்பு நடை பெற்றதாகவும், பா.ஜ.க ஆட்சியில் அதுபோல் இதுவரை நடைபெற விடாமல் இந்தியா பாதுகாப்பாக உள்ளதாகவும், தேசத்தின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வேண்டுமானால் மோடி பிரதமராக இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

 

மேலும்,காங்கிரஸ் ராகுல் காந்தியை ஸ்டாலினை தவிர இந்தியாவில் வேறு எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. நம்மையும்,தேசத்தையும் காப்பதற்காக காவலாளி போல் கண்விழித்து பணியாற்றிக்கொண்டிருப்பதாகவும், ஊழல் மேல் ஊழல் செய்து கொண்டிருக்கும் காங்கிரஸை களவாணிகள் என குற்றஞ்சாட்டினார். அதனால் நடைபெற உள்ள தேர்தல் காவலாளிக்கும், களவாணிக்கும் இடையே நடக்க கூடிய தேர்தல். தேசத்தின் நலனுக்குக்காக கண் விழித்து காத்துக்கொண்டிருக்கும் காவலாளிக்கும்,பாகிஸ்தானுக்கு உதவிக்கரமாக இருக்க போகிற களவாணிக்கும் இடையே நடக்கக்கூடிய தேர்தல் என்றும், அதனால் 2 ஆம் முறையாக நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

 

மேலும்,வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் மகன் மற்றும் 2 ஜி ஊழலில் ஈடுபட்ட ஆ.ராசாவும் தமிழகத்தில் போட்டியிட்டுள்ளார்கள். அவர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள்ளே செல்பவர்கள் அல்ல நிரந்தரமாக உள்ளே போகப்போகிறவர்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்தை சேர்த்துக்கொண்டிருப்பதாகவும், அதனால் விரைவில் ‘ உள்ளே ‘ இருப்பார்கள் என்றும் பேசினார்.

கூட்டத்தில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ், பா.ஜ.க மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகநாதன், சாமிநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்,கூட்டணி கட்சியை சேர்ந்த நி்ர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.


Leave a Reply