டிக்டாக் செயலிக்கு தடை போடுங்க சாமி; கருத்துக்கணிப்பில் இளைஞர்கள் அமோக ஆதரவு

டிக் டாக் ஆப்பை தடை செய்ய 80% இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

 

டிக் டாக் செயலி பயன்படுத்தி பாடலுக்கு நடனமாடி வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் விரும்பத்தகாத செயல்களும் பிரச்சனைகளும் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம், இளைஞர்களை பாலியல் ரீதியாகத் தூண்டும் டிக் டாக் செயலியை ஏன் தடைசெய்யக் கூடாது என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.

 

இச்சூழலில், இளைஞர்கள் டிக் டாக் தடையை வரவேற்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், இந்தியா முழுவதும் 18 – 35 வயதிற்கு உட்பட்ட 30,000 நபர்களை ஈடுபடுத்தியுள்ளது. அவர்களிடம் டிக் டாக் தடை பற்றிக் கேள்வி எழுப்பியுள்ளது.

 

அதில் 80 சதவீத இளைஞர்கள் டிக் டாக்கை தடை செய்யலாம் எனக் கூறியுள்ளனர். மீதம் 20 சதவீதம் பேர் டிக் டாக் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Leave a Reply