வெற்றிக்காக டிடிவியின் உதவியை நாடினாரா பொன்னார்? அதிரடி புகாரால் அதகளப்படும் அரசியல் களம்!

பாஜக கூறியதால் தான் கருப்பு முருகானந்தம் என்பவர் தம்மை தொடர்பு கொண்டு கன்னியாகுமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அதிரடி தகவல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ள கருப்பு முருகானந்தம் “டிடிவி தினகரனுடன் பேசியது உண்மைதான். ஆனால், குமரி தேர்தல் குறித்துப் பேசவில்லை. மாறாக மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்ல டிடிவி தினகரன் தான் முயற்சி மேற்கொண்டதாக கூறியிருக்கிறார்.

 

மேலும், பாஜகவினரை தினகரன் சந்திக்க முயற்சித்தது குறித்து தேவைப்பட்டால் உரிய ஆதாரங்களை வெளியிடத் தயார் என்றும் அவர் என கூறியுள்ளார்.பொன்.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான கருப்பு முருகானந்தம் கடந்த மக்களவைத் தேர்தலில் தஞ்சையில் போட்டியிட்டார்.

 

இவர், டிடிவி தினகரனின் சொந்த மாவட்டமான திருவாரூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.டிடிவி தினகரனின் குற்றச்சாட்டு குறித்து கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் கூறுகையில், “கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் இருக்கிறார் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

 

அதனால் இப்படி குறுக்கு வழியில் பயணிக்க முயற்சிக்கிறார். டிடிவி தினகரனே அதை இப்போது சொல்லிவிட்டார்” என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Reply