அதிக இடங்களை கைப்பற்றும் கட்சி இதுதான்; பரபரப்பான கருத்து கணிப்பு முடிவு வெளியீடு

சென்னை: வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக அணி அதிக இடங்களை கைப்பற்றும் என்று லயோலா கல்லூரி கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வரும் 18ஆம் தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

 

இந்த நிலையில், லயோலா கல்லூரியின் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு வெளியாகியுள்ளன. இக்குழு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 21 ஆயிரத்து 464 பேரிடம் கருத்து கேட்டறிந்தது.

அதன்படி, தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு  27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு  உள்ளது. அதிமுக கூட்டணி 3 முதல் 5 தொகுதிகளிலும், அமமுக 1 முதல் 2 தொகுதிகள் வரை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக அது தெரிவிக்கிறது.

 

அதேபோல், 18 சட்டசபை இடைத்தேர்தலில் திமுகவுக்கு 9 முதல் 11 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. இது திமுக அணியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply