எப் -16 விமானத்தை இந்தியா சுட்டது நிஜமா? அமெரிக்க இதழ் கூறும் பரபரப்பு தகவல்கள்

வாஷிங்டன்: புல்வாமா தாக்குதலின் போது பாகிஸ்தானின் எப் – 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறி வரும் நிலையில், அதுபற்றிய சந்தேகத்தை அமெரிக்க பத்திரிக்கை கிளப்பியுள்ளது.

 

காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய போர் விமானங்கள், பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பயங்கரவாதி முகாம்களை குண்டு வீசி தாக்கின. இதையடுத்து நமது எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் நுழைந்தனர். அவர்களை, போர் விமானங்கள் கொண்டு  இந்தியா அடித்து விரட்டியது.

அப்போது பாகிஸ்தான் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது. அதன் பாகங்களை ஆய்வு செய்த இந்திய ராணுவத்தினர், பாகிஸ்தான் எப்.16 போர் விமானத்தை பயன்படுத்தியதாக தெரிவித்தனர். ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்து வருகிறது.

 

எனினும் கைப்பற்றப்பட்ட பாகங்களின் வரிசை எண், குறியீடு வைத்து இது எப்.16 ரக போர் விமானம் என்று கூறிய இந்தியா, ஆதாரங்களை அமெரிக்காவுக்கு அனுப்பியது.

 

எப்.16  ரக போர் விமானத்தை உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையின்படி, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கியது.  ஆனால் ஒப்பந்த விதிகளை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறி வந்தது.

 

இந்நிலையின் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் “பாரீன் பாலிசி” இதழ், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள், அண்மையில் பாகிஸ்தான் வசமுள்ள எப். 16 ரக விமானங்கள் ஆய்வு செய்ததாகவும், அப்போது  அமெரிக்காவால் வழங்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையில் எதுவும் குறையவில்லை என்றும் தெரிவித்துள்ளஹ்டு.

 

எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறி வரும் நிலையில் அதற்கு மாறாக இந்த தகவல் உள்ளது. எனினும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம், இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எதையும் கூறவில்லை.


Leave a Reply