ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுபவரா நீங்க? ஏப்ரல் 12 வரை விண்ணப்பிக்க அவகாசம்

தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும்  ஆசிரியர்கள் டெட் (TET) எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியிருக்க வேண்டும். இதை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.

 

 

இந்த ஆண்டிற்கான  ‘டெட்’ தேர்வு அறிவிப்பு,  கடந்த பிப்ரவரி 28ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பிப்பவர்கள்  www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 5 (இன்று) என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில், இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முயன்றவர்களில் பலரால் சர்வர் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களின் மின்னஞ்சலுக்கு வரும் ‘ஒடிபி’ எனப்படும் ஒருமுறை கடவுச்சொல் காலதாமதமாக வந்ததால் பரலும் தடுமாறினர்.

 

இதையடுத்து, டெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 12-ம் தேதி வரை ‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

 


Leave a Reply