3 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் வர வாய்ப்பு- ஆர்.எஸ்.பாரதி தகவல்

காலியாக இருக்கும் அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் உரிய நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமி‌ஷன் தெரிவித்துள்ளது. இதனால் இந்த 3 தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்று பலர் கூறி வருகின்றனர்.

இதுபற்றி இந்த வழக்கை தொடர்ந்த தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

3 தொகுதிகளுக்கும் உரிய நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று சுப்ரீம் கோட்டில் தேர்தல் கமி‌ஷன் கூறி உள்ளது. நாங்கள் ஏப்ரல் 19-ந் தேதிக்குள் ஒரு தேதியில் தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டதால்தான் அப்படி முடியாது என்று கூறிவிட்டனர்.

ஆனால் 7 கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தேர்தல் கமி‌ஷன் நினைத்தால் ஒரு தேதியை முடிவு செய்து அறிவிக்க முடியும். எனவே மே 19-ந்தேதிக்குள் 3 தொகுதி இடைத்தேர்தலை நடத்த வாய்ப்பு உள்ளது.


Leave a Reply