பும்ராவின் காயம் கவலைப்படும்படி இல்லை?

ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பும்ரா தோள்பட்டையில் காயம் அடைந்தார். வேகப்பந்து வீச்சாளரான அவர் மே மாதம் நடக்கும் உலககோப்பை போட்டியில் முக்கிய துருப்பு சீட்டாக இருப்பார் என்ற நிலையில் காயம் அடைந்ததால் கிரிக்கெட் வாரியம் கவலை அடைந்தது.

காயத்தின் தன்மை குறித்து பும்ராவுக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. இதற்கிடையே, கிரிக்கெட் வாரிய தரப்பில் கூறும்போது, பும்ராவுக்கு தோள்பட்டையில் ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் கவலை கொள்ளும்படியான காயம் இல்லை. கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்த அனைத்து ஸ்கேன்களும் பும்ராவுக்கு செய்யப்பட்டது என தெரிவித்தனர்.


Leave a Reply