--- --:--:-- --

2 மாணவிகளை 14 பேர் சேர்ந்து கூட்டு வன்கொடுமை..!

2

புதுச்சேரியில் இரண்டு பள்ளி மாணவிகளை 14 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 9 ஆம் வகுப்பு மாணவிகள் இரண்டு பேர் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 

ஆனால், அன்றைய இரவே, இரண்டு மாணவிகளும் சோர்வான நிலையில், வீடு திரும்பினர். இந்நிலையில், இரண்டு மாணவிகளிடமும் காவல்துறையினர் தனித்தனியாக ரகசிய விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின.

 

அதாவது, மீன் வியாபாரியான புஷ்பராஜ் மற்றும் ஏசி மெக்கானிக் தொழில் செய்யும் மணி என்கிற மணிமாறன், 2 மாணவிகளை காதலிப்பதாக கூறி கடந்த 2 ஆம் தேதி புதுச்சேரி கடற்கரைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.மேலும் 12 பேர், 2 மாணவிகளிடமும் ஆசை வார்த்தை கூறி, தனித்தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.

 

புகாரின் அடிப்படையில், மீன் வியாபாரி புஷ்பராஜ் மற்றும் ஏசி மெக்கானிக் மணிமாறனை காவல்துறையினர் கைது செய்தனர். எஞ்சிய 12 பேரில், அரசியல் பிரமுகர்களின் மகன்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Right Menu Icon