இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 17 பேர் பலி..!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 17 பேர் உயிரிழந்தனர். மத்திய சுகாதாரத் துறை தகவல் படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 பேர் உயிரிழந்தனர்.
கொரோனாவுக்காக 30,041 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 67 ஆயிரத்து 250 ஆக உயர்ந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





