--- --:--:-- --

கொரோனாவில் இருந்து குணமடைந்த 15 பேர் டிஸ்சார்ஜ்..!

1

கொரொனா வைரஸிலிருந்து குணமடைந்த நிலையில் கரூர் மற்றும் கோவை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 15 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கரூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 118 பேர் ஒருவனாக சிகிச்சை பெற்று வந்தனர்.

 

இவர்களில் 9 பேர் குணமடைந்து, பரிசோதனைகள் மூலம் முடிவு செய்யப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரொனா தொற்று இல்லை என்றாலும் மருத்துவ கண்காணிப்பில் இருந்த 19 பேரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அடுத்த பதினான்கு நாட்கள் கண்காணிக்க படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

 

கோவை இ‌எஸ்‌ஐ மருத்துவமனையில் கொரொனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த ஆறுபேரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து கொரொனா உறுதி செய்யப்பட்டு 187 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 6 பேர் 14 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.

 

மொத்தமாக கோவையில் கொரொனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் 11 பேர் குணம் அடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon