லாரி ஓட்டுனர் இருக்கைக்கு அடியில் 15 அடி நீள மலைப்பாம்பு..!
பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் பாம்புகளில் ஒன்று புகுந்தது போன்ற வீடியோ வைரலாகியுள்ளது. தற்போது அதே போன்று மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பாட்னாவில் உத்திரபிரதேச மாநிலம் சென்ற லாரி ஓட்டுனர் இருக்கைக்கு அடியில் 15 அடி நீள மலைப்பாம்பு ஒன்று இருப்பதை கண்டு ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
உடனே லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி அந்த டிரைவர் அருகிலிருந்தவர்களிடம் தகவல் தெரிவிக்க அவர்கள் வனத்துறையினரை வரவழைத்தனர்.
வனத்துறையினர் இருக்கைக்கு அருகில் இருந்த பாம்பை மெது மெதுவாக வெளியே எடுத்து பார்த்தபோது தான் தெரிந்தது. 15 அடிக்கு மேல்நீளம் கொண்ட மலைப்பாம்பை மீட்க வனத்துறையினர் மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.






