--- --:--:-- --

கூடுதல் தளர்வுகள் குறித்து 14 முக்கிய அறிவிப்புகள்..!

1

மிழகத்தில் கொரொனா பொது முடக்க கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை அறிவித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

அனைத்து வகை கடைகள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகள் பயிற்சிகள் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நவம்பர் 1-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகளையும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

தனித்து இயங்கும் மது கூடங்கள் உட்பட அனைத்து வகையான நிறுவனங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு பயிற்சி நிலையங்கள் 100 சதவீத பயிற்சியாளர்களுடன் இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள் மற்றும் கலைஞர்களுடன் சினிமா உள்ளிட்ட அனைத்து வகையான படிப்புகள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

 

படப்பிடிப்பில் பங்குபெறும் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவை தவிர பிற மாநிலங்கள் இடையே சாதாரண மற்றும் குளிர்சாதன பேருந்துகள் 100% இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon